×

23 பேருக்கு கொரோனா தொற்று: நாகர்கோவிலில் தனியார் கம்பெனி, வங்கி மூடல்

நாகர்கோவில்: குமரியில் கொரோனா தொற்று வேகமெடுக்கும் நிலையில் நாகர்கோவிலில் உள்ள ஒரு கம்பெனியில் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அந்த கம்பெனி மூடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் கொரோனாவின் 2 வது அலை வேகமெடுத்து உள்ளது. 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரண்டு பேர் இறந்துள்ளனர். இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது.இந்த நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைசெய்யும் ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் அந்த ஓட்டலுக்கு கிருமிநாசினி தெளித்தனர். மேலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அங்கு பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சி சார்பில் அந்த கம்பெனியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்த கம்பெனி மூடப்பட்டது.நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வங்கியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வங்கி மூடப்பட்டது. தக்கலை: தக்கலை ேகார்ட் ரோட்டில் கல்குளம் கிளை எஸ்பிஐ வங்கி உள்ளது. இந்த வங்கி ஊழியர்கள் இருவருக்கு காய்ச்சல் இருந்ததால் தக்கலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சளி பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆசாரிபள்ளம் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் வங்கியில் உள்ள மற்ற ஊழியர்களுக்கு நேற்று சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பத்மனாபபுரம் நகர்ப்புற மருத்துவமனை டாக்டர் லாரன்ஸ் விக்டர்ஜோ தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். 12 ஊழியர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. நகராட்சி சுகாதார துறையினர் வங்கி முன் பகுதியில் கிருமி நாசினி தெளித்தனர். நகராட்சிப்பகுதியில் இது வரை 6 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்….

The post 23 பேருக்கு கொரோனா தொற்று: நாகர்கோவிலில் தனியார் கம்பெனி, வங்கி மூடல் appeared first on Dinakaran.

Tags : Corona epidemic for 23 people ,Nagarkovil ,Nagarko ,Kumarii ,Corona pandemic ,23 people ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...