×

கந்தர்வகோட்டை அருகே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி சீரமைக்காவிட்டால் போராட்டம்: கெண்டையன்பட்டி கிராம மக்கள் முடிவு

கறம்பக்குடி: கந்தவர்கோட்டை அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா துவார் ஊராட்சியில் துவார், ஆண்டிகுழப்பன்பட்டி, கெண்டையன்பட்டி, பெத்தாரிபட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. கெண்டையன்பட்டியில் 40 ஆண்டுகளுக்கு முன் துவார் ஊராட்சி சார்பில் 60,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சிமென்ட் காரைகள் பெயர்ந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முழுவதும் நீர்கசிவு ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து, கெண்டையன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டுமென கந்தர்வகோட்டை ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீர்த்தேக்க தொட்டியை விரைந்து சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்….

The post கந்தர்வகோட்டை அருகே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி சீரமைக்காவிட்டால் போராட்டம்: கெண்டையன்பட்டி கிராம மக்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Kandarvakot ,Kendayanpatti ,Karambakudi ,Kandavarkot ,Pudukottai district ,Kandarvakottai ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை