×

நெல்லை-பாலக்காடு பாலருவி ரயில் பகுதி ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை: ரயில் பாதை பணிகள் காரணமாக நெல்லை – பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே, மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலம், ஷோரனூர் அருகே உள்ள வடக்கஞ்சேரி ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக நெல்லையில் இருந்து ஏப். 16, 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் புறப்படும் நெல்லை – பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில்(வண்டி எண் 06791)  திருச்சூர் – பாலக்காடு ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.மறுமார்க்கத்தில் பாலக்காட்டில் இருந்து ஏப்.16, 17, 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பாலக்காடு – நெல்லை பாலருவி சிறப்பு ரயில் (வண்டி எண் 06792) பாலக்காடு – திருச்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post நெல்லை-பாலக்காடு பாலருவி ரயில் பகுதி ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai-Palakkadu Balaruvi Railway ,Southern Railway ,Nellau ,Nella-Palakkad ,Balaruvi ,South ,Nellai-Palakkad ,Salaruvi Railway ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...