×

இந்தியாவில் நிமோனியா பாதிப்பால் 1 மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழப்பு: யுனிசெப் அமைப்பு தகவல்

டெல்லி: குழந்தைகள் நலனுக்காக உலக அளவில் செயல்படும் யுனிசெப் அமைப்பின் சார்பில் ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பு நிமோனியா நோய் குறித்து ஒரு ஆய்வை நடத்தியது. நிமோனியாவால் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 14 குழந்தைகள் உயிரிழப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பின் துணை இயக்குநர் டாக்டர் ராஜேஷ் கன்னா 2018-ம் ஆண்டில் மட்டும் நிமோனியாவால் இந்தியாவில் 1,27,000 குழந்தைகள் 5 வயதுக்குட்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

எனவே கடந்த 2018-ல் இந்தியாவில் 1,27,000 குழந்தைகளும், நைஜீரியாவில் 1,62,000 குழந்தைகளும், பாகிஸ்தானில் 58 ஆயிரம் குழந்தைகளும், காங்கோவில் 40 ஆயிரம் குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 32 ஆயிரம் குழந்தைகளும் உயிரிழந்தாக தகவல் அளித்துள்ளது. உலக அளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் குழந்தைகள் நிமோனியா நோயால் இறக்கின்றனர். அதாவது நாள்தோறும் 2 ஆயிரம் குழந்தைகள் இறக்கின்றனர் என  யுனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது.

நிமோனியா பாதிப்பால் ஏற்படும் குழந்தைகள் இறப்பைத் தடுக்க அரசு சார்பில் இலவச தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் அகாதெமி வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை நிமோனியாவால் பாதிக்கப்படுகிறது.  நிமோனியா என்பது நுரையீரலில் நீர் சேர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்படும் நோயாகும். இதற்கு உரிய காலத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் நிமோனியா பாதிப்பில் இருந்து குழந்தைகளை குணப்படுத்த முடியும்.

வைரஸ்,  பாக்டீரியா,  பூஞ்சை போன்ற பல்வேறு காரணங்களால் நிமோனியா பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக 5 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்படும்போது சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட நிகழ்கின்றன. இதில் தாய்ப்பால் முறையாக கிடைக்காதது, உடலில் நோய் எதிர்ப்பு குறைந்து இருப்பது, ஊட்டச் சத்து குறைவு போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்படும்.  

தமிழகத்தில் 5 வயதுக்கு குறைவாக உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 16 சதவீதம் குழந்தைகள் நிமோனியாவில் இறக்கின்றனர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு காற்றின் மூலம் கூட பிறரிடம் இருந்து இந்நோய் தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. எனவே நிமோனியா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள குழந்தை பிறந்து 6 முதல் 14 வாரங்கள் வரையில் மூன்று தவணையாகவும்,  ஆண்டுக்கு ஒரு முறை 4 தவணைகளாகவும் தடுப்பூசி அளிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : children ,India ,UNICEF , India, pneumonia, 1 hour, 14 children, death, UNICEF, Information
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...