கேசரியுடன் மயக்க சாக்லெட் கொடுத்து நண்பரின் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து கூட்டு பலாத்காரம்

* நகையை பறித்து கொலை மிரட்டல் விடுத்ததும் அம்பலம்

* கள்ளக்காதலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

சென்னை : கோயில் திருவிழாவில் கேசரியுடன் மயக்க சாக்லெட் கொடுத்து, நண்பரின் மனைவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து 2 பேர் கூட்டு பலாத்காரம் செய்து 3 சவரன் செயினை பறித்துள்ளனர். அதோடு இல்லாமல் பலமுறை மிரட்டி சக நண்பர்களுக்கும் விருந்து படைத்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கம் காந்தி நகர் பகுதியை ேசர்ந்தவர் தீபா (26), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் தச்சு வேலை செய்து வருகிறார். முதல் மனைவி இறந்ததால் இரண்டாவதாக இளம்பெண் தீபாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.  இந்நிலையில், தீபாவின் கணவர் தச்சு வேலை காரணமாக கடந்த ஜூலை மாதம் வெளியூர் சென்று இருந்தார். பின்னர் 2 மாதம் கழித்து வீட்டிற்கு வந்த கணவர், மனைவி தீபா கழுத்தில் கிடந்த 3 சவரன் செயின் இல்லாததால் எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது, தீபா, உங்கள் நண்பரான அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (எ) ஹரீஷ்குமார் (30), நீங்கள் வெளியூர் சென்ற பிறகு சாமி பிரசாதம் என்று கேசரியுடன் சாக்லெட் ஒன்று கொண்டு வந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. கண்விழித்து பார்த்த போது, நான் நிர்வாணமாக இருந்தேன். அப்போது வினோத்குமார் ஒன்றாக இருப்பது போல் வீடியோ எடுத்து மிரட்டி 3 சவரன் செயினை பறித்து சென்றுவிட்டதாக கூறினார்.

இதை கேட்டு கணவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமாரை பிடித்து விசாரித்தனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது: தீபாவின் கணவருக்கு 40 வயது. தச்சு வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று தங்குவது வழக்கம். அப்போது வீட்டின் அருகே உள்ள கணவரின் நண்பரான வினோத்குமாருடன் தீபாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவர் தச்சு வேலைக்கு சென்றதும் தீபா கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்துள்ளார். இந்த பழக்கத்தில் வினோத்குமார், அவசர செலவுக்காக தீபாவிடம் 3 சவரன் செயினை வாங்கியுள்ளார். மேலும், வினோத்குமார் நண்பர் சதீஷ்குமாருக்கு தீபா மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அவர், வினோத்குமாரிடம் தீபாவுடன் ஒன்றாக இருக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளார். அதற்கு வினோத்குமார், இதற்கு தீபா ஒப்புக் கொள்ளமாட்டார். ஒரே வழிதான் உள்ளது. மயக்க சாக்லெட் கொடுத்து தீபாவுடன் இருக்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த ஜூலை மாதம் வீட்டின் அருகே  உள்ள புற்று கோயில் திருவிழா நடந்தபோது தீபாவின் கணவர் வெளியூரில் இருந்துள்ளார். அதை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட வினோத்குமார் தீபா வீட்டிற்கு சென்று கோயில் பிரசாதம் என்று, கேசரியுடன் மயக்க சாக்லெட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

கள்ளக்காதலன் என்பதால் அதை வாங்கி சாப்பிட்ட தீபா, சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். உடனே திட்டமிட்டபடி சதீஷ்குமார் தீபாவுடன் ஒன்றாக இருந்துள்ளார். அப்போது வினோத்குமார் எந்த பிரச்னை வந்தாலும் சமாளிக்கும் வகையில் இருவரும் ஒன்றாக இருந்ததை தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டார். அதன்பிறகு தீபா கண்விழித்து பார்த்த போது வினோத்குமாருடன் இருந்ததால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரியம் முடிந்ததும் சதீஷ்குமார் தீபா வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனால் எந்த சந்தேகமும் தீபாவுக்கு வரவில்லை. இதற்கிடையே வேலைக்கு சென்ற கணவன் ஓரிரு நாளில் வீட்டிற்கு வர இருப்பதால் அதற்குள் 3 சவரன் செயினை திருப்பி கொடுக்கும்படி தனது கள்ளக்காதலன் வினோத்குமாரிடம் தீபா கேட்டுள்ளார். ஆனால், வினோத்குமாரால் செயினை திருப்பி கொடுக்க முடியவில்லை. எனவே, தீபாவுக்கும் கள்ளக்காதலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வினோத்குமார் அதிர்ச்சி தரும் வகையில் தனது செல்போனில் வீடியோ ஒன்றை தீபாவிடம் காட்டியுள்ளார்.

அதில் தீபா, சதீஷ்குமாருடன் ஒன்றாக இருக்கும் காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வினோத்குமார், இந்த வீடியோ வெளியில் தெரிந்தால் உன் நிலைமை என்ன ஆகும் என உனக்கு தெரியும். எனவே நாங்கள் கூறுவது போல் நடக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். பின்னர் வினோத்குமார், சதீஷ்குமார் ஆகியோர் பலமுறை தீபாவுடன் ஒன்றாக இருந்துள்ளனர். அதோடு இல்லாமல், இருவரும் தனது நண்பர்களுடனும் ஒன்றாக இருக்கும்படி கூறி வீடியோவை காட்டி மிரட்டியுள்ளனர். வேறு வழியின்றி தீபா அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து போலீசார் கள்ளக்காதல் விவகாரத்தால் 3 சவரன் செயினை வினோத்குமாரிடம் தீபா கொடுத்ததால், மூன்று சவரனுக்கான 90 ஆயிரம் பணத்தை கொடுக்க ேவண்டும் என்று போலீசார் கூறி உள்ளனர். அதன்படி, காவல் நிலையத்தில் வினோத்குமார் 50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். மீதமுள்ள ₹40 ஆயிரத்தை 10 நாட்களில் தருவதாக ஒப்புக்கொண்டு எழுதி கொடுத்துவிட்டு வந்துள்ளார். ஆனால், 10 நாட்கள் கடந்த நிலையில் வினோத்குமார் பணத்தை திரும்ப கொடுக்க வில்லை. விருகம்பாக்கம் போலீசாரும் பணத்தை பெற்று தரவில்லை.

இதையடுத்து தீபா மற்றும் அவரது கணவர், ேநற்று முன்தினம் தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். பின்னர் துணை கமிஷனர் உத்தரவுப்படி வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் மயக்க சாக்லெட் கொடுத்து ஒன்றாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த வினோத்குமார், சதீஷ்குமார் மீது ஐபிசி 354(சி), 328, 384, 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>