அமைச்சர் உதயகுமார் தகவல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு பிரதமரை அழைத்து வர ஏற்பாடு

மதுரை: மதுரையில் அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டி: ‘‘மதுரையின் 10 தொகுதிகளில் 5 நாட்களுக்கு தொடர்ஜோதி நடைபயணம் துவக்கப்பட்டுள்ளது. இப்பயணம் மக்கள் குறைதீர்ப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பயணமாகவும் அமையும். பொங்கல் திருநாளை ஒட்டி, அலங்காநல்லூரில் நடக்கும் புகழ்மிக்க ஜல்லிக்கட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வர அனைத்து வித முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கும் கருத்து, மிகச்சரியானதாகவே இருக்கும். நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி கணேசன் நிலைமை என்று சொன்னதில் உண்மை இருக்கிறது.  இதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார்.

Tags : Udayakumar ,Information Hall , Minister Udayakumar , Prime Minister ,Information Hall
× RELATED நாட்டில் சாலை மேம்பாட்டில் தமிழகம்...