×

மாவோயிஸ்ட் மணிவாசகம் உடல் சேலம் வந்தது

சேலம்: கேரள மாநிலத்தில் கடந்த 29ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகம் உடலை அவரது மனைவி, தங்கை சிறையில் இருப்பதால், மற்றொரு சகோதரியான லட்சுமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது. அதன்படி திருச்சூர் அரசு மருத்துவமனையில் சகோதரி லட்சுமியிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து கேரள அரசு ஆம்புலன்சில் நேற்றிரவு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கும்,   மணிவாசகத்தின் சொந்த ஊரான ராமமூர்த்தி புதூரிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். லட்சுமி கூறுகையில், சொந்த ஊரில் இன்று மணிவாசகம் உடல் தகனம் செய்யப்படும் என்றார்.

Tags : Salem ,Maoist , Maoist hourglass ,body came , Salem
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை