×

கலைஞர் அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்வி உதவி நிதி 2 லட்சம்

சென்னை: நலிந்தோர் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக கலைஞர் அறக்கட்டளை சார்பில் இதுவரை 4 கோடியே 91 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2012 ஜூன் மாதம் முதல் உதவித் தொகை  10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாகவும், 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தியும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் நேற்று 2 லட்சத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி 4 கோடியே 91 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2019, அக்டோபர் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா 25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சம் 13-11-2019 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


Tags : Artist Foundation ,Artist Foundation of Medical and Educational Assistance , 2 lakh, Medical and Educational Assistance , Artist Foundation
× RELATED கலைஞர் அறக்கட்டளை சார்பில் நலிந்தோர்...