×

ஆவின் பால் பாக்கெட்டில் திருக்குறள் : நிர்வாகம் ஆலோசனை

சென்னை: ஆவின் பால் பாக்கெட்டுகளில் தினமும் ஒரு திருக்குறள் அச்சடித்து விநியோகம் செய்ய ஆவின் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த சர்ச்சையை தொடர்ந்து சமீபத்தில் பாஜ கட்சியின் நிர்வாகி ஒருவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதில் தினமும் ஒரு திருக்குறளை ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும் என்று ெதரிவித்திருந்தார்.

இந்த கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘மிக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் தினம் ஒரு திருக்குறள் அச்சிட்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். எனவே விரைவில் ஆவின் பால் பாக்கெட்டுக்களில் திருக்குறளை அச்சிட ஆவின் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

Tags : Aavin , Thirukkural ,Aavin's milk pocket, management advice
× RELATED மதுரை ஆவின் கூட்டுறவு நாணய சங்கத்தில்...