×

இரண்டாவது நாளாக ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ராணுவ நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்திய வீரர்கள் தந்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் பாகிஸ்தான் தனது அத்துமீறலை தொடர்ந்தது. ரஜோரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கெரி பகுதியில் காலை 7 மணிக்கு பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியது. சிறிய ரக ஆயுதங்கள், சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் ராணுவ நிலைகள் குறிவைத்து தாக்கப்பட்டன. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.Tags : attack ,Pakistani , Army positions, Pakistan, attack
× RELATED காஷ்மீரின் நக்ரோட்டாவில் நடந்த...