×

ராஜஸ்தானில் காங்கிரசார் ஆவேசம் மத்திய அமைச்சர் கார் மீது கல்வீச்சு

பார்மர்: ராஜஸ்தானில் மத்திய இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி சென்ற கார் மீது காங்கிரஸ் தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தானின் பேடூ சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பார்மரில் நேற்று முன்தினம் இரவு மத ரீதியிலான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, ராஷ்டிரிய லோக்தன்ரிக் எம்பி ஹனுமன் பெனிவால் ஆகியோர் வந்தனர். எம்பி பெனிவால் ேநற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இம்மாநில வருவாய் துறை அமைச்சர் ஹரீஷ் சவுத்ரி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார்.

 இந்நிலையில். ஹரீஷ் சவுத்ரியின் சட்டப்பேரவை தொகுதியான பேடூவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரியும்,  எம்பி ஹனுமன் பெனுவாலும் நேற்று முன்தினம் இரவு காரில் வந்தனர். அமைச்சர் வருகையால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். எனினும், அமைச்சரின் கார் வந்தவுடன் அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் திடீரென கல்வீச்சில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அமைச்சரின் கார் சேதம் அடைந்தது. ேபாலீஸ் ஜீப்பும் சேதமானது. கல்வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர், போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் கைலாஷ் சவுத்ரியும், ஹனுமன் பெனிவாலும் கலந்து கொண்டனர்.


Tags : Rajasthan ,Union Minister , Rajasthan, Congress and Union Minister
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்