×

பொறுமையை அதிகப்படுத்த ஐஏஎஸ், ஐபிஎஸ்.க்கு வில் வித்தை பயிற்சி

டேராடூன்: பொறுமை, ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிப்பதற்காக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 3 நாட்கள் வில்வித்தை பயிற்சி அளிக்கப்படுகிறது.  உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் அருகேயுள்ள முசோரியில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு வில்வித்தை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சியை வில் வித்தையில் 3 முறை சாம்பியன் பட்டம் பெற்றவரும், குஜராத் விளையாட்டு ஆணையத்தின் பயிற்சியாளருமான தினேஷ் பில் வழங்குகிறார். இவர் குஜராத்தில் தனியாக பயிற்சி மையம் அமைத்து பழங்குடியின இளைஞர்களுக்கு இலவசமாக வில்வித்தை பயிற்சி அளித்து வருகிறார்.

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வில்வித்தை பயிற்சி அளிப்பது தொடர்பாக தினேஷ் பில் கூறுகையில், ‘‘சவாலான நேரத்தில் அதிகாரிகள் எவ்வாறு பொறுமையாக இருப்பது, மனதை எவ்வாறு ஒருநிலைப்படுத்துவது என்பது பற்றி இந்த பயிற்சியில் விளக்குவேன்.  நாட்டின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களுக்கு அருமையான இந்த விளையாட்டு குறித்து பயிற்சி அளிப்பதை பெருமையாக கருதுகிறேன்,’’ என்றார்.

Tags : IAS ,IPS , IAS, IPS, Archery Training
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு