×

பிறழ் சாட்சியத்தை தவிர்ப்பதற்காக வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு: அரசின் நிலை தெரிவிக்க உத்தரவு

மதுரை:  கொலை வழக்குகளில் தண்டனை மற்றும் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரிக்கிறது. இவர்கள் கடந்த 8ம்  தேதி பிறப்பித்த உத்தரவில், பல வழக்குகளில் சாட்சியங்கள் பிறழ் சாட்சிகளாக மாறியதால் பலர் விடுதலையாகின்றனர். எதிர்வரும் காலங்களில் விசாரணையின்போது, சாட்சியங்களை வீடியோ, ஆடியோ பதிவு செய்வது குறித்து காவல்துறை  தரப்பில் உரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.  இந்த வழக்கு நேற்று மதியம் மீண்டும் விசார ணைக்கு வந்தது.  தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,  உதவி கமிஷனர் லில்லி கிரேஷி ஆகியோர் ஆஜராகினர்.

 அரசு தலைமை குற்றவியல் வக்கீல் நடராஜன், ‘‘அனைத்து வழக்குகளிலும் வீடியோ பதிவு என்பது விசாரணை நேரத்தை அதிகரிக்கும். அதிகளவு நேரத்தை எடுத்துக் கொள்ளும்’’ என்றார்.  இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் தமிழக  அரசின் நிலை என்ன? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். சென்னை ஐகோர்ட் வக்கீல்களும் கருத்தை தெரிவிக்கலாம்’’ என உத்தரவிட்டனர்.

Tags : Confessions , Contemporary Witness, Confessions Video
× RELATED ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவர்களை நீக்கி...