×

47 டன் ரேஷன் அரிசி மாயமான வழக்கில் தர்மபுரி கலெக்டர் விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நுகர்பொருள் வாணிபக்கழக குடோன் உள்ளது. இங்கிருந்து நல்லி, கஞ்சம்பட்டி, நத்தத்துப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள முழுநேர ரேஷன் கடைகளுக்கும், கஞ்சம்பட்டி ரேஷன் கடைக்கு கீழ் இயங்கிய  புல்வாய்பட்டி, என்.சுப்பையாபுரம் ஆகிய ஊர்களில் உள்ள பகுதி நேர ரேஷன் கடைகளுக்கும், கடந்த 2008 பொங்கல் பண்டிகையையொட்டி விநியோகம் செய்வதற்காக 3 லாரிகளில் 47 டன் ரேஷன் அரிசி அனுப்பப்பட்டது.இது கடைகளுக்கு  கொண்டு செல்லாமல் கடத்தப்பட்டது அப்போது மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மலர்விழி (தற்போது தர்மபுரி கலெக்டர்) ஆய்வில் தெரியவந்தது.இதுதொடர்பாக 25 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு விருதுநகர் ஜே.எம்.1  நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தர்மபுரி கலெக்டர் மலர்விழி ஆஜராகி அரசு தரப்பு வாக்குமூலம் அளித்தார்.

Tags : court ,Virudhunagar ,Dharmapuri Collector , Dharmapuri Collector, Virudhunagar Court
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...