×

காருடன் எரித்து தொழிலதிபர் படுகொலை

மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் சிறுகனூர்-லால்குடி சாலையில் தச்சங்குறிச்சி வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை கார் ஒன்று எரிந்து கிடந்தது. அதில் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்து, போலீசார் விசாரணை  நடத்தினர். இதில் காருக்குள் இறந்து கிடந்தவர், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்த ஜாகிர்உசேன் (45) என்று அவரது மனைவி, குழந்தைகள் உறுதி செய்தனர். அப்போது அவரது மனைவி கூறுகையில், கணவர் ஜாகிர்உசேன்,  சென்னைக்கு சென்று பழைய கார்களை வாங்கி வந்து திருச்சியில் விற்கும் கன்சல்டன்சி நடத்தி வருவதாகவும் அவரை யாரோ எரித்து கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். இதன்பேரில், சிறுகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Businessman ,death , Businessman, burnt to death
× RELATED புதுச்சேரியில் தொழிலதிபரை கடத்தி பணம், நகை பறித்த 4 பேர் கைது