×

ஜெய்ப்பூரிலிருந்து காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் மும்பை வருகை

மும்பை: மகாராஷ்டிராவில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை பாஜ விலைக்கு வாங்க முயற்சி செய்யும் என்று கருதிய காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும், காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில், அம்மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்திருந்தது. 5 நாட்களாக அவர்கள் அங்கு தங்கி இருந்தனர்.  தற்போது மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு விட்டதால்  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று  ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு வந்தனர்.


Tags : Congress MLAs ,Mumbai ,Jaipur , Jaipur, Congress MLA, Mumbai
× RELATED மும்பையை வீழ்த்தியது நார்த்ஈஸ்ட்