×

எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என அறிவித்தது பாஜ தீட்டிய சதியின் ஒரு அம்சம்: ‘சாம்னா’வில் கடும் தாக்கு

மும்பை: சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது; 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஒரு கட்சியாலேயே ஆட்சியமைக்க முடியவில்லை என்றால், புதிய அரசு அமைப்பதில் மற்ற கட்சிகளுக்கு சிரமம் இருக்கத்தான் செய்யும். அதற்காக தனிப்பெரும் கட்சி மகிழ்ச்சியாக இருப்பதாக அர்த்தமல்ல. அந்த கட்சி துன்பகரமான மகிழ்ச்சியில் இருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். தனிப்பெரும் கட்சியான பாஜ ஆட்சியமைக்க 15 நாள் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், சிவசேனாவுக்கோ 24 மணிநேர அவகாசம் கூட அளிக்கப்படவில்லை. இது குரூரமானது.

சில எம்.எல்.ஏ.க்கள் வெளி மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்களிடம் எல்லாம் எப்படி உடனடியாக ஆதரவு கடிதம் பெற முடியும்? அரசு இயந்திரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று கூற வேண்டும். பாஜ தனது வாக்குறுதியை காப்பாற்றியிருந்தால் இப்போதைய சிக்கல் ஏற்பட்டிருக்காது, நாங்களும் மாற்று ஏற்பாடுக்கு யோசித்திருக்க மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.

தேவேந்திர பட்நவிஸ் ‘மகாராஷ்டிரா சேவகன்’:
மும்பை: முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், தன் பெயருக்கு முன்பு ‘மகாராஷ்டிராவின் சேவகன்’ என சேர்த்துக் கொண்டுள்ளார். தேவேந்திர பட்நவிஸ் முதல்வராக பதவியில் இருந்த வரை தேவ் பட்நவிஸ் என்ற ஆங்கில பெயரில் டிவிட்டர் பக்கத்தை பயன்படுத்தி வந்தார். அதிகாரப்பூர்வமான பதிவுகளை அதில் அவர் பதிவிட்டு வந்தார். மகாராஷ்டிராவில் பாஜ.வால் மீண்டும் ஆட்சியமைக்க முடியாமல் போனதால் கடந்த 8ம் தேதியன்று தேவேந்திர பட்நவிஸ் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து டிவிட்டர் பக்கத்தில் தனது பெயருக்கு முன்னால் ‘கேர்டேக்கிங் சீப் மினிஸ்டர்’ (காபந்து முதல்வர்) என சேர்த்துக் கொண்டார். நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இதனால், தேவேந்திர பட்நவிஸ் இப்போது டிவிட்டரில் தனது பெயருக்கு முன்னால் மகாராஷ்டிராவின் சேவகன் என்ற ஆங்கில வாசகத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

Tags : opposition party ,attack ,Baja , Shiv Sena Party
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு