×

ரபேல் மறுசீராய்வு வழக்கிலும் தீர்ப்பு

ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்து கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்த நடைமுறை அனைத்தையும் ஆராய்ந்து பார்த்ததில் அவை அனைத்தும் சரியான ஒன்றாகதான் இருக்கிறது. அதனால், இந்த விவகாரத்தில் போர் விமான ஒப்பந்தத்திற்கு தடை விதிக்க முடியாது’ என தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி, பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்கா ஆகியோர் கடந்த பிப்ரவரி 2ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘ரபேல் போர் விமான விவகாரத்தில் மத்திய அரசு முற்றிலும் தவறான தகவலை அளித்துள்ளது. எனவே, தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.

Tags : Rafael's reconsideration case
× RELATED தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து...