×

மனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த ஆசிரியர் ஆற்றில் குதித்து தற்கொலை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (35). தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு தான்யா (6) என்ற மகள் உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரை விட்டு பிரிந்து மைதிலி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பலமுறை உதயகுமார் நேரில் சந்தித்து மைதிலியிடம் சமாதானம் கூறி குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். அதை அவர் ஏற்கவில்லை. இதனால் உதயகுமார் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அதிகளவு மது அருந்திவிட்டு கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்துக்கு சென்ற உதயகுமார், பாலத்தின் மேல் ஏறி அங்கிருந்த கீழே குதித்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்ததும் மணலி புதுநகர் போலீசார் விரைந்து வந்து உதயகுமாரின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Teacher ,suicide ,river , Anguished teacher,commits,suicide,jumping ,river
× RELATED ஓய்வு ஆசிரியர் இறந்ததாக கூறி தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை