சென்னை தெற்கு மாவட்ட திமுகவினர் இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறலாம்: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை:  தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் இன்று முதல் 20ம்தேதி வரை விருப்ப மனுக்களை கொடுக்கலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட திமுகவினர் தயாராகி வருகின்றனர். இன்று முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட உள்ள நிலையில், அதை வாங்கி உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், சென்னை தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 53 வார்டுகளில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் இன்று காலை 10 மணி முதல் பெறப்படுகிறது. சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது’’ என கூறியுள்ளார்.

Related Stories:

>