×

மாதவரம் அரசு தாலுகா மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி: வெகுநேரம் காத்திருந்து சிகிச்சைெபறும் அவலம்

திருவொற்றியூர்: மாதவரம் அரசு தாலுகா மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இதனால் அவர்கள் வெகுநேரம் காத்திருந்து சிகிச்சைபெற்று செல்லும் அவலநிலை உள்ளது.  மாதவரம் மண்டலம், பால்பண்ணையில் அரசு தாலுகா மருத்துவமனை உள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் இந்த மருத்துவமனையில் பிரசவம், குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் பல்வேறு தொற்று நோய்கள் தொடர்பான சிகிச்சைக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

 இந்நிலையில், இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஏற்ப போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. இதனால் சிகிச்சைக்காக பல மணிநேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், உள்நோயாளிகளாக பலர் அனுமதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால்  சுற்றுவட்டாரத்தில் உள்ள பல நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே இனியாவது கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : doctors ,government taluk hospital ,Madhavaram ,Madhavaram Government Taluk Hospital , Patients suffer, shortage ,Madhavaram government taluk hospital,awaiting treatment
× RELATED தேனி மாவட்டத்தில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நீடிப்பு: நோயாளிகள் அவதி