×

எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை வெளிநாட்டு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கலாம்: தர்மேந்திர பிரதான் தகவல்

புதுடெல்லி: பொதுத்துறை நிறுவனங்களில் அரசு பங்குகளை விற்க நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்படி, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனத்தில் அரசு பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. சமீபத்தில் இதுகுறித்து குறிப்பிட்ட தர்மேந்திர பிரதான், நிறுவனத்தை நடத்தி தொழில் செய்வது அரசின் வேலை அல்ல என கூறியிருந்தார்.

இந்நிலையில், அபுதாபியில் மாநாடு ஒன்றில் பங்கேற்க சென்றிருந்த பிரதான், இந்தியாவின் எரிபொருள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதை இந்தியா வரவேற்கிறது. நாட்டின் 3வது பெரிய நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்குகளை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த ஏலத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கலாம் என்றார்.


Tags : companies ,oil companies ,Dharmendra Pradhan , Foreign companies,selling oil,companies may participate , auction, Dharmendra Pradhan
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!