×

தளவாய்தெரு, வடிவீஸ்வரத்தில் தெருவின் மையப்பகுதியை ஆக்கிரமித்து வீடு, கடைகள்: விரைவில் இடித்து அகற்றம்

நாகர்கோவில்: நாகர்கோவில் வடிவீசுவரம் மற்றும் மீனாட்சிபுரத்தில் தெருவின் மையப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள் வீடுகளை இடித்து அகற்ற மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரில் பிரதான சாலைகள் முதல் தெருக்கள் வரை மிகவும் குறுகலாக உள்ளன. கால்வாய்களும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆக்கிரமிப்புகள் உருவாகி உள்ளன. கோட்டாறு, மீனாட்சிபுரம், வடிவீசுவரம் போன்ற பகுதிகளில் தற்போது மாநகராட்சி சார்பில், ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்து அவற்றை இடித்து அகற்ற நோட்டீஸ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கோட்டாறு ரயில் நிலைய சாலை, பிள்ளையார் கோயில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அளவிடு செய்து இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தளவாய் தெரு வழியாக பல ஆயிரம் மக்கள் சென்று வருகின்றனர். இங்கு ஆக்கிரப்புகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதற்கிடையே இந்த பகுதியில் நகரமனையிடம் மற்றும் ரதவீதிகளில் மையப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பலரும் வருவாய்த்துறையில் பி மெமோ பட்டா வாங்கி வைத்திருந்தனர். இந்த பகுதியில் அவ்வப்போது வருவாயத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற செல்லும் போது, தங்களுக்கு நிரந்தர பட்டா வேண்டும் என கோரிக்கை வைப்பது வழக்கமாக இருந்துள்ளது. மேலும் அரசியல் அழுத்தம் கொடுத்து, தங்களது ஆக்கிரமிப்பு கட்டிடங்களை தற்காத்து வந்தனர்.

இந்த நிநலையில் கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் 144 பி மெமோக்களை ரத்து செய்து மாநகராட்சிக்கு அதன் பட்டியலை வழங்கியது. இதனையடுத்து நகரமனையிட பகுதியை அளவிட்டு அவற்றை மீட்க மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தளவாய்தெரு மற்றும் வடிவீசுவரம் மேலரதவீதி ஆகியவற்றை அளவிடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அளவீட்டின் போது, நகர மனையிடம் மட்டுமின்றி கால்வாய்களை ஆக்கிரமித்தும், வடிவீசுவரம் மேலரதவீதி, தளவாய்புரம் தெருவில் அழகம்மன்கோயில் வரை மையப்பகுதியை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்ற நோட்டீஸ் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி, ஆக்கிரமிப்பாளர்களே கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும். அல்லது மாநகராட்சி சார்பில் இடித்து அகற்றி விட்டு, அதற்கான செலவு தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம் வசூலிக்கப்படும். என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்களா?

தற்போது மாநகராட்சி சர்வே துறை மற்றும் நகரமைப்பு அதிகாரிகள் இணைந்து, பி மெமோ ரத்து செய்யப்பட்ட பகுதிகளில் சர்வே எண் படி வரிசையாக அளவீடு செய்து, அதன்பின் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இதற்கிடையே வழக்கமான கட்டுமான வரைபட அனுமதி ஆய்வு பணிகள், ஆக்கிரமிப்பு அகற்றம் போன்ற பணிகளும் உள்ளதால் விரைந்து நோட்டீஸ் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே கூடுதல் அதிகாரிகளை ஆய்வு பணிக்கு நியமித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Dhalavaderu ,street ,demolition ,shops ,houses ,Dhavalvaderu ,area ,Vadiveeswaram Street Homes , Delaware Street, Home, Shops, Removal
× RELATED சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்