×

திருவள்ளூர் ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்றுகளை ஊராட்சிக்கு வழங்காமல் கிடப்பில் போட்டதால் கருகும் அவலம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் பள்ளி வளாகம், பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணியில் வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, திருவள்ளூர் அடுத்த ஈக்காடு ஒன்றிய அலுவலக வளாகத்தில், 10 ஆயிரம் புங்கன், 35 ஆயிரம் புளியன், 25 ஆயிரம் வேம்பு என மொத்தம் 70 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, நடவு செய்யப்பட்டது. இதற்கென வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கு செடி வளர்ப்புக்கு தோட்ட கலை துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், செடி தயாரிப்புக்கு தேவையான உரம் மற்றும் பாலித்தீன் பைகள், பசுமை குடில் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், மரக்கன்றுகள் வளர்க்க கூலித்தொகையும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து முறைப்படி வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை, கிராமங்களுக்கு கொண்டு சென்று, அதை நட்டு பராமரிக்க வேண்டும். ஆனால், வளர்ந்த ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் அலுவலக வளாகத்தில் உள்ள பார்க்கில் காய்ந்து கிடக்கிறது. இதனால், அரசின் திட்டம் செயல்படுத்தப்படாமல் பல லட்சம் ரூபாய் வீணாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும், வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், அதே ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு மரக்கன்றுகளை வீணாக்காமல் முறையாக ஊராட்சிகளுக்கு வழங்கி, மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, மாவட்டத்தை பசுமையாக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : office ,Thiruvallur Union , Thiruvallur Union office has been left empty-handed without giving the trees a panchayat
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்