×

பந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்: நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐசிசி

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் பூரனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ்  பீல்டிங் செய்த போது, நிக்கோலஸ் பூரன் பந்தை பளபளப்பாக்க தொடைப்பகுதியில் தேய்த்தார். அப்போது கை பெருவிரலால் பந்தின் மேற்பகுதியை சேதப்படுத்தினார்.

இவரின் இந்த செயல் கேமிராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது. இதனால் பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது  நடுவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நடுவர்கள் அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதித்துள்ளது. இதனால் அடுத்த நான்கு டி20 போட்டிகளில் அவர்களால் விளையாட இயலாது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இதே போல பந்தை சேதப்படுத்தி கேமிராவில் சிக்கிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமிரான் பான்கிராப்ட் ஆகியோர் தடை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Nicholas Pooran Four ,West Indies ,Nicholas Booran ,ICC ,matches , West Indies, Nicholas Booran, play ban, ICC
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது