×

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பிரமுகரை போலீசார் இழுத்துச் சென்றதால் பரபரப்பு: வீடியோ வெளியானதால் விடுவிப்பு

சேலம்: 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பிரமுகரை கியூ பிரிவு போலீசார் விசாரணைக்கு இழுத்துச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிழக்கு மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய திமுக பொறுப்பாளர் விஜயகுமார்(45). இவர் நேற்று மாலை இவரது வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் அட்மிஷன் தொடர்பாக பள்ளி நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பள்ளி அலுவலகத்திற்குள் புகுந்த 5க்கும் மேற்பட்டோர் அவரை இழுத்துக்கொண்டு வெளியே வந்து, காரில் ஏற்றிச் சென்றனர். தகவலறிந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், அம்மாப்பேட்டை போலீசில் விஜயகுமார் கடத்தப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், புகாரை வாங்க போலீசார் மறுத்து விட்டனர்.
இந்நிலையில் விஜயகுமாரை பெண் உள்பட 4 பேர் வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் அலுவலகத்தின் வாசலில் விஜயகுமாரை பெண் அதிகாரி ஒருவரும், 4 போலீசாரும் கையை பிடித்து இழுக்கின்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. தரதரவென இழுத்துக்கொண்டு காரில் ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியை வைத்து விசாரித்தபோது சேலம் கியு பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா என்பது தெரியவந்தது.  வீடியோ காட்சி வெளியே வந்த பிறகுதான் விஜயகுமாரை கியு பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இரவு 11 மணிக்கு கியூ பிரிவு போலீசார் விஜயக்குமாரை விடுவித்தனர். என்னை காரில் இழுத்துச்சென்ற போலீசார், 8 வழிச்சாலை தொடர்பாக நீங்கள் எந்தெந்த போராட்டத்தில் பங்கேற்றீர்கள், நாளை மீட்டிங் போடுகிறீர்களாமே? சின்னகவுண்டாபுரத்தை சேர்ந்த முருகேசன் என்பவரை கடத்தி வைத்துள்ளீர்கள் என்றனர். வீடியோ காட்சி வெளியாகி இருக்காவிட்டால் என்னை வழக்கில் சிக்க வைத்திருப்பார்கள் என்றார்.

Tags : protestors ,activists ,DMK ,road rape , 8 Wayfarer, Resistance, DMK
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...