கேரள கடற்கரையில் விதிமீறி கட்டிடம் கட்டிய கட்டுமான நிறுவன அதிபருக்கு முன்ஜாமீன் மறுப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கேரளாவில் கடற்கரை பகுதியில் தடையை மீறி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய விவகாரத்தில் தொடர்புடைய ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் சந்தீப் மேத்தாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயின் ஹவுஸிங் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்திவரும் சந்தீப் மேத்தா என்பவர் கேரளாவில் கடற்கரை பகுதியில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில், முன் ஜாமீன் உத்தரவில் தவறான குற்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளதால் உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி அவர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு  நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், சந்தீப் மேத்தாவுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். அரசு தரப்பின் இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபர் சந்தீப் மேத்தாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>