×

உண்மையில் சொன்னால் இந்தியாவில் எதிர்காலத்தில் தொழில் செய்வது கஷ்டம்: வோடபோன் தலைவர் பரபரப்பு

புதுடெல்லி:  இந்தியாவில் தொலைதொடர்பு துறையில் உள்ள நிறுவனங்களுக்கு சிக்கல் தான். இனி தொழில் நடத்த  முடியாத சூழ்நிலை காணப்படுகிறது என்று வோடபோன் தலைவர் கூறியுள்ளார்.  இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல வோடபோன் நிறுவனத்தின் சிஇஓ நிக் ரீடு நேற்று டெல்லியில் பேட்டியளித்தார்.  அவர் கூறியதாவது: இந்தியாவில் தொழில் முதலீடு மற்றும் வாய்ப்பு மிகவும் மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனினும், நம்பிக்கையுடன் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம். அதற்கான சந்தையும் இருப்பதை கணித்துள்ளோம். சந்தையில் கடுமையான தொழில் போட்டியை சமாளிக்க வேண்டியது இருக்கும் என்பதும் எங்களுக்கு தெரியும். அதற்கு நாங்கள் சமாளிக்க தயாராக இருக்கிறோம்.

 கடும் போட்டி நிலவுவதால் இந்தியாவில் இருந்து வோடபோன் வெளியேற உள்ளது என்ற வதந்தி சமீப காலமாக பரப்பப்பட்டு வருகிறது. இதில் உண்மை இல்லை. இந்த வதந்தியை நம்ப வேண்டாம். வோடபோன் நிறுவனம் தனது சேவையை தொடர்ந்து அளிக்கும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழில் போட்டியை சமாளிக்க தகுந்த உத்திகளை கையாள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். தொழில் போட்டியில் சீரான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறியுள்ளோம். வோடபோன்-ஐடியா ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை செய்து வுகின்றன. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளிக்கும் சலுகைகள் மற்றும் கூடுதல் வசதிகள் மற்ற நிறுவனங்களின் வர்த்தகத்தை  கடுமையாக பாதிக்கிறது. இதனால் அவை தொழில் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன.  இவ்வாறு வோடபோன் தலைவர் நிக் ரீடு கூறினார்.

Tags : Vodafone ,India ,Future Business , said,future , India, Vodafone leader, business
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...