×

ஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் (38 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வாட்சன் கூறுகையில், ‘இந்த பதவி எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். அதே சமயம் என் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பும் அதிகம். எனினும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிரிக்கெட் வீரர்களின் முன்னேற்றத்துக்காக உழைப்பேன்.


ஆஸ்திரேலியாவில் மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்துவதுடன் வீராங்கனைகளின் நலனை உறுதி செய்வோம்’ என்றார். ஆஸி. அணிக்காக 59 டெஸ்ட், 190 ஒருநாள் போட்டி மற்றும் 58 டி20ல் விளையாடி உள்ள வாட்சன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல், பிக்பாஷ் போன்ற உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.
Tags : president ,Watson ,Australian Players Association ,association president ,Australian , Australian ,players, Watson,association, president
× RELATED பாஜக அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் நியமனம்