ஏடிபி டூர் பைனல்ஸ் நடாலை வீழ்த்தினார் ஸ்வெரவ்

லண்டன்: ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் ஆந்த்ரே அகாசி பிரிவு லீக் ஆட்டத்தில், அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) நம்பர் 1 வீரர் ரபேல் நடாலை (ஸ்பெயின்) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.லண்டன் ஓ2 அரங்கில் நடந்த இப்போட்டியில் நடாலின் சர்வீஸ் ஆட்டங்களை அதிரடியாக முறியடித்து புள்ளிகளைக் குவித்த ஸ்வெரவ் (7வது ரேங்க், 22 வயது) 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். முதல் லீக் ஆட்டத்திலேயே இளம் வீரரிடம் தோல்வியைத் தழுவியது நடாலுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவுடன் (4வது ரேங்க், 23 வயது) மோதிய கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (6வது ரேங்க், 21 வயது) 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். மெட்வதேவுடன் நேருக்கு நேர் மோதிய 6 போட்டிகளில் சிட்சிபாஸ் முதல் முறையாக வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>