×

மின்வாரிய கேங்மேன் பணிக்கு 25ம்தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: மின்வாரியத்தின் கேங்மேன் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு வரும் 25ம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) நேரடி பணி நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு வரும் 25ம் தேதி முதல் நடைபெறும். விண்ணப்பதாரர்களுக்கு நாள், நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்களுடன் மற்றும் அனுமதி சீட்டு, சரிபார்ப்பு பட்டியல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். தேர்வு நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமும் அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு 19ம் தேதி முதல் www.tangedco.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்’.

Tags : Electric Gangman , Electrician Gangman, Certificate Verification
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை