×

தமிழகத்தில் திட்ட பணிகளுக்காக எங்குமே நிலம் எடுக்க முடிவதில்லை.. வயதானதால்தான் நடிகர்கள் கட்சி தொடங்குகிறார்கள் : முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை : உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு தான், இதில் அரசுக்கு தொடர்பு இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்நது பேசிய அவர், கோவையில் அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததால் நிகழ்ந்த விபத்து குறித்து இதுவரை தனது கவனத்திற்கு வரவில்லை என்று கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, கட்சி கோடி கம்பம் நடவேண்டாம் என்று நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதை நினைவுக் கூர்ந்தார்.  

*கால அவகாசம் குறைவு என்பதால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்கூட்டியே விருப்ப மனு பெறப்படுகிறது.

*உள்ளாட்சி தேர்தலில் மேயரை மக்களே தான் தேர்வு செய்வார்கள், மறைமுக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்.

*வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
நீதிமன்ற உத்தரவின்படியே காவல்துறை செயல்பட்டு வருகிறது.ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் போலீஸ் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.   

*தமிழகத்தில் அரசின் திட்ட பணிகளுக்காக எங்குமே நிலம் எடுக்க முடிவதில்லை. எதிர்ப்பு போராட்டம், வழக்குகளால் சாலை விரிவாக்கம், மின்கோபுரம் உள்ளிட்டவை அமைப்பதில் தாமதமாகிறது. 14 சாலைகளை விரிவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. மின்பாதை அமைக்கவும் நிலம் கையகப்படுத்த முடியாத நிலை இருந்தால் மின்தேவை எப்படி பூர்த்தியாகும் ?. மக்கள் ஒத்துழைத்தாலே சாலை விரிவாக்கப் பணிகளை நிறைவேற்ற முடியும்.

*அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்?. வயதானதால்தான் நடிகர்கள் கட்சி தொடங்குகிறார்கள். திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாக பார்க்கிறார்கள்.திரைப்படங்களில் நடித்து வருவாயை ஈட்டும் வேலையைதான் நடிகர்கள் செய்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை பொறுப்புகள் உள்ளன என்பது கூட நடிகர்களுக்கு தெரியாது. தொண்டர்களாவது தனது படத்தை பார்க்கட்டும் என்றுதான் கமல் நடித்துக்கொண்டிருக்கிறார்.

Tags : Tamil Nadu ,land ,Gram ,Silver , Chief Minister Palanisamy, Vedana, Local Elections
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...