×

காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் ஒரு பாதுகாப்பு படையினரும் படுகாயம் அடைந்துள்ளார்.

2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள Gund பகுதிக்கு அருகே  தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, அம்மாவட்ட காவல்துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். சற்றும் தாமதிக்காமல், பாதுகாப்புப் படையினர், கடுமையான பதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே, துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்தது. நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில்,  பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதியில் பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது. மேலும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று பகுதியில் வேறு ஏதேனும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்....

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்

இந்த தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. எனினும் பலியான தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்படவில்லை. இதனிடையே இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பாதுகாப்பு படையினரும் படுகாயம் அடைந்துள்ளார். இதே போன்று நேற்று காஷ்மீரின் பந்திபோராவில் நடைபெற்ற என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.  பலியானவர்களில் ஒருவர் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் மாவட்டத் தளபதி, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அபு தல்ஹா ஆவார். மற்றொருவர் காஷ்மீர் பயங்கரவாதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : area ,militants ,Kashmir ,Kandarbal , Lashkar-e-Taiba, militants, assassins, Kandarpal, Jammu and Kashmir, security forces, attack, firing, weapons, ammunition
× RELATED கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம்