×

வெ.இண்டீசுக்கு 250 ரன் இலக்கு

லக்னோ: ஆப்கானிஸ்தான் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 250 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன் குவித்தது. இப்ராகிம் ஸத்ரன் 2, ரகமத் ஷா 10, இக்ராம் அலிகில் 9 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளிக்க, சிறப்பாக விளையாடிய ஹஸ்ரதுல்லா 50 ரன் (59 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), அஸ்கர் ஆப்கன் 86 ரன் (85 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்), நஜிபுல்லா ஸத்ரன் 30, முகமது நபி ஆட்டமிழக்காமல் 50 ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் கீமோ பால் 3, அல்ஜாரி ஜோசப் 2, ஷெப்பர்டு, ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 250 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது.

Tags : Afghanistan team, West Indies
× RELATED இந்தியா - ஆஸி. இடையேயான முதல் டி20:...