குமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே அம்மன் கோயிலில் சிலைகள் உடைப்பு மர்ம கும்பல் குறித்து விசாரணை

சுசீந்திரம்: குமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே இசக்கி அம்மன் கோயிலில் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் கோயிலில் இருந்த சிலைகளை உடைத்துவிட்டு சென்றுள்ளனர். குமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே கீழகாட்டுவிளையில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயியில் ஒரு குடும்பத்தினர் வழிபாடு நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை தோறும் பூஜைகள் நடத்துவது வழக்கம். இதை அப்பகுதியை சேர்ந்த காலபெருமாள் நடத்தி வருகிறார். இவரது மனைவி சமீபத்தில் இறந்து விட்டார்.இதனை தொடர்ந்து 2 வாரம் பூஜைகள் நடத்தவில்லை. மேலும் இந்த கோயில் சார்பில் மாதாந்திர சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் குலுக்கல் நடத்துவது வழக்கம். நேற்றுமுன்தினம் ஐப்பசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், மாதாந்திரசீட்டு குலுக்கல் கோயிலில் நடந்துள்ளது.

பின்னர் அனைவரும் கோயிலில் இருந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்ற காலபெருமாளின் மகன் விஜயராகவன்(38), கோயில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். புகாரின்படி சுசீந்திரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் கோயில் கதவை உடைத்து புகுந்து அங்கிருந்த கல்விளக்கையும், சுவாமி சிலையையும் உடைத்துள்ளனர். கோயில் வளாகத்தில் இருந்து நாகர்சிலையையும் உடைத்துள்ளனர். கோயில் வளாகத்தில் நின்ற 6 ஆடி உயர சுடலைமாடன் சிலையின் இரு கைகளையும் உடைத்து எறிந்துள்ளனர். கோயிலின் மூலஸ்தான கதவை உடைத்த மர்மநபர்கள், இசக்கிஅம்மன் சிலையை உடைக்கவில்லை. மேலும் கோயில் நிர்வாகத்துக்குள் ஏதாவது பிரச்னை இருந்து சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதா என முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

துப்பாக்கியுடன் வந்து கோயில் சிலைகள் உடைப்பு

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம்  அடுத்துள்ள முத்துகாப்பட்டி அடுத்த கொல்லிமலை அடிவாரத்தில், பெரியசாமி  கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம  நபர்கள், கருவறையில் உள்ள விளக்கு கூண்டு, வெளி வளாகத்தில் உள்ள  கருப்பணார், முனியப்பன் சிலைகள் மற்றும் குதிரை வாகனத்தின் கால் பகுதி  ஆகியவற்றை அடித்து உடைத்தனர். கோயில் அருகே உள்ள  புதுக்கோம்பை பகுதிக்கு சென்று, பூசாரி ரகுவின் வீட்டு கதவை அடித்து  உடைத்தனர்.

கோபி பகுதிகளில் பலத்த மழை

3 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின: போக்குவரத்து துண்டிப்பு

கோபி: கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், அத்தாணி, டி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கணக்கம்பாளையம் மற்றும் டி.என்.பாளையம் வன பகுதியிலும் நேற்று கனமழை பெய்தது. வன பகுதியில் பெய்யும் மழை நீரானது பத்துக்கும் மேற்பட்ட காற்றாறுகள் மூலம் வேதபாறை பள்ளம் வழியாக பவானி ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது. இந்த வெள்ள நீரால் சத்தி-அத்தாணி சாலையில் கொண்டையம்பாளையம் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.  பாலத்தின் மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

இதேபோல், கனமழையால் கணக்கம்பாளையம் பகுதியிலும் 2 தரைப்பாலங்கள் மூழ்கியது. கணக்கப்பாளையம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.கொடிவேரி அணைக்கு பூட்டு: பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் திறந்து விடப்படுகிறது. தற்போது 4,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணையில் பாதுகாப்பு தடுப்பை தாண்டி தண்ணீர் விழுகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்குள் செல்லவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அணையின் முன்பக்க கதவை பூட்டியும், வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பும் ஏற்படுத்தி உள்ளனர்.

Related Stories:

>