×

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 715 லட்சம் கோடியை எட்டும்: ராஜ்நாத் நம்பிக்கை

புதுடெல்லி: ‘‘அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் 10 டிரில்லியன் அமெரிக்க டாலரை (₹715 லட்சம் கோடி) எட்டும்’’ என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாப்புத்துறை ஏற்பாடு செய்த ‘டிபென்ஸ் கனெக்ட் 2019’ என்ற நிகழ்ச்சியை டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார். இதில் பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் உருவாக்கிய புதிய தயாரிப்புகள்  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:உள்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை பார்க்கும்போது பெருமையாக உள்ளது. அவர்களுக்கு உணர்வுப்பூர்வமான பாதுகாப்பு தேவை.

2024ம் ஆண்டுகள்குள் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை (₹57 லட்சம் கோடி) எட்ட பிரதமர்  மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்தியாவின் திறமையான நபர்களை பார்க்கும்போது, அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் 10 டிரில்லியன் டாலரை (₹715 லட்சம் கோடி) எட்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ராணுவ தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா என்பதை விட, புதுமையை கண்டுபிடித்து, ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறும்.  ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் உற்பத்தி ஆகியவை கூட்டு நடவடிக்கை. இதற்கு அரசு  மற்றும் தனியார் துறை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உள்நாட்டு தொழில்நுட்பத்திலான பாதுகாப்பு தொறிற்சாலைக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : Rajnath ,Indian , next , years, Indian economy , Rajnath believes
× RELATED உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன்...