இன்று முதல் மீண்டும் காஷ்மீரில் ரயில் சேவை

புதுடெல்லி:  காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்ட ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ெதாடங்கவுள்ளதாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் காஷ்மீரில் ரயில் போக்குவரத்து இன்று  தொடங்க உள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ரயில்ேவ போலீசார் அளித்த உத்தரவாதம் மற்றும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியைத்தொடர்ந்து 12ம் தேதியில் இருந்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை  பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். நகர்-பாரமுல்லா இடையே இரண்டு ஜோடி ரயில்கள் இயக்கப்படும்” என்றனர்.

Related Stories:

>