×

ஜேஇஇ தேர்வில் வங்க மொழியை சேர்க்கக்கோரி போராட்டம்

கொல்கத்தா: ஜேஇஇ தேர்வில் வங்காள மொழியை சேர்க்கக் கோரி மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்.சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இன்ஜியரிங் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ மெயின்) இந்தி, ஆங்கிலம் தவிர 22 மாநில மொழிகளில் நடத்த என்.டி.ஏ(தேசிய பரிசோதனை ஏஜன்சி) முடிவு செய்துள்ளது. இதில் வங்காள மொழி இடம் பெறவில்லை.  மேற்கு வங்கத்தை மத்திய அரசு பாகுபாடுடன் நடத்துகிறது என குற்றம்சாட்டி திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் இந்த போராட்டத்தில் திரிணாமுல் தொண்டர்கள்  நடத்தினர்.

Tags : JEE Exam,engali language, Cerkkakkori,
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்