கோபி சுற்றுவட்டார பகுதியில் கனமழை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது: போக்குவரத்து துண்டிப்பு

கோபி: கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி, டி.என், பாளையம் வனப்பகுதியில் பெய்த கன  மழை காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், அத்தாணி, டி.என்.பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கணக்கம்பாளையம் மற்றும் டி.என்.பாளையம் வன பகுதியிலும் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது.

வன பகுதியில் பெய்யும் மழை நீரானது பத்துக்கும் மேற்பட்ட காற்றாறுகள் மூலமாக வேதபாறை பள்ளம் வழியாக பவானி ஆற்றில் கலந்து வீணாகி வருகிறது. இந்த வெள்ள நீரால் சத்தி-அத்தாணி சாலையில் கொண்டையம்பாளையம் என்ற இடத்தில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. பாலத்தின் மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றதால் போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் அவதிக்குள்ளாகினர். இதே போன்று கன மழையினால் கணக்கம்பாளையம் பகுதியிலும் இரண்டு தரைப்பாலங்கள் மூழ்கியது. இதனால் கணக்கப்பாளையம் கிராமத்திற்குள் வெள்ள நீா் புகுந்தது. இதனால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

Related Stories:

>