ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுச்சக்கரகுப்பத்தில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக பைப்லைன் அமைக்கப்பட்டது. அப்போது, தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடி சாலை அமைக்கவில்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இங்குள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பிரச்னைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,jobler road ,Jolarpet , Jalarpete, upland, slopes, slopes, road, revamp, public demand
× RELATED சபரிமலை செல்லும் பெண்களுக்கு...