×

வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை: பவுர்ணமியொட்டி வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 2 சிறப்பு ரயில்கள் இன்றும் நாளையும் இயக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கையால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி இன்று மாலை 6.46 மணிக்கு தொடங்கி, நாளை இரவு 7.49 மணிக்கு நிறைவடைகிறது.

இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் வரலாம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே இன்று வேலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில் இன்று இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைகிறது.

நாளை அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.55 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. அதேபோல் விழுப்புரத்தில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைகிறது. இதே ரயில் நாளை அதிகாலை 3.15 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது.

Tags : Thiruvannamalai ,Vellore , Vellore, Villupuram, Thiruvannamalai, 2 special trains, movement
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...