×

உற்பத்தித்துறையை 2 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்புடையதாக மாற்றும் இலக்கு எட்டப்படும்: அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: இந்தியா அடுத்த பத்து, பதினைந்து ஆண்டுகளில், 10 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக திகழும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். தளவாட உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும், டெஃப்-கனெக்ட் என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை டெல்லியில் தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், இதனைக் கூறியிருக்கிறார். வருகிற 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக உயர்த்த பிரதமர் இலக்கு நிர்ணயித்திருப்பதை ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.

ஆனால், தமது கணிப்பின்படி, அடுத்த பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில், 10 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதார மதிப்புக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என உறுதிபட நம்புவதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தளவாட உற்பத்தியில் தனியார் நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருவதாகவும், இதனால், வருகிற 2025ஆம் ஆண்டுக்குள், பாதுகாப்புத்துறை உற்பத்தித்துறையை, 2 ஆயிரத்து 600 கோடி டாலர்கள் மதிப்புடையதாக மாற்றும் இலக்கு எட்டப்படும் என்றும், ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

Tags : Rajnath Singh , Minister of Production, Dollars, Rajnath Singh
× RELATED ரூ.39,125 கோடிக்கு ஏவுகணைகள் போர்விமானங்கள் வாங்குகிறது இந்தியா