×

தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனையாகிறது : உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ்

சென்னை : வெங்காயம் பதுக்கலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடை மற்றும் பல்பொருள் சிறப்பு அங்காடியில் விற்கப்படும் காய்கறிகளின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.அப்போது வெங்காயம் மற்றும் மற்ற காய்கறிகளை நுகர்வோருக்கு எடை போட்டு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காய்கறிகளின் விலையேற்றம் கண்காணிக்கப்பட்டு வருகிறது, வெங்காயத்தின் விலை ஏற்றம் தற்காலிகமானது தான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயம் ரூ. 30 மற்றும் ரூ. 40க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் வெங்காய விற்பனைக்காக கூடுதல் பண்ணை பசுமை கடைகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார். வெங்காயத்தில் விலை அதிகரித்து வருவதால் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து நேரிடையாக கொள்முதல் செய்யப்படுவதாகவும், விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


Tags : Kamaraj ,stores ,Farm Green ,Tamil Nadu ,Farm Green Stores , Food Security, Minister, Kamaraj, Farm Green, Vegetable
× RELATED ஒட்டன்சத்தித்தில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு