×

கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு மகாபிஷேகம்

ஜெயங்கொண்டம்: கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான அன்னாபிஷேகம் இன்று (11ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி நேற்று மகாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உலகபிரசித்தி பெற்ற உலக புராதன சின்னமான பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள பதிமூன்றரை அடி உயரமும், 62அடி சுற்றளவும் கொண்ட பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் விழா இன்று (11ம்தேதி) நடக்கிறது.

இவ்விழாவை காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக கமிட்டி. மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து செய்து வருகின்றனர். அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பிரகதீஸ்வருக்கு நேற்று ருத்ரஹோமம், மகாபிஷேகம் நடைபெற்றது , மேலும் பிரகன்நாயகி, மகிஷாசுரமர்த்தினி, சண்டிகேஸ்வரர் ஆகியவற்றுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. திரவிய பொடி மாவு பொடி சந்தனம் பால்,தயிர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பழங்கள், உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் இன்று காஞ்சி சங்கார மடத்தை சேர்ந்த விஜயேந்திர சங்கராச்சாரியார் அன்னாபிஷேக விழாவில் கலந்து கொள்கிறார்.

Tags : Pragadheeswara ,Gangaikondozolupuram ,Gangai konda Cholapuram , Gangai konda Cholapuram
× RELATED சாலையோரத்தில் வீசிச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தையை மீட்ட திருநங்கை!