×

2025ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்க திட்டம் : அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டும் பணி தொடக்கம்

டெல்லி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில் பணிகளை துவக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு


அயோத்தி விவகாரத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைப்பதாக சமீபத்தில் இவ்வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம். அங்கு ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என அனுமதி அளித்தது. 3 மாதங்களில் டிரஸ்ட் அமைத்து, ராமர் கோயில் பணிகளை துவக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூறி இருந்தது.

மத்திய அரசு ஆலோசனை


உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து இந்து மற்றும் இஸ்லாமிய தலைவர்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பாபா ராம்தேவ், மௌலானா எம்.மதானி உள்ளிட்ட இந்து, இஸ்லாமிய ஆன்மீக தலைவர்களும் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். 4 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் நாட்டில் அமைதியை ஏற்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக இந்து, முஸ்லீம் தலைவர்கள்  உறுதி அளித்தனர்.

5 ஆண்டுக்குள் கோயில் கட்டி முடிக்கத் திட்டம்


இதையடுத்து அயோத்தி வழக்கிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட பணிகளை மத்திய, மாநில அரசுகளும் இந்து அமைப்புகளும் தொடங்கியுள்ளனர்.  பிரபல கட்டிட கலை நிபுணர் சோம்புரா ராமர் கோயில் கட்டிடத்தை 1989ம் ஆண்டே வடிவமைத்துவிட்டார். அதன் அடிப்படையில் அயோத்திக் கட்டப்படலாம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்திருக்கிறது. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி எதிர்வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

ராமநவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுவதால் அதையொட்டி கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் எனத் தெரிகிறது. 2025ம் ஆண்டுக்குள் 5 ஆண்டுகளில் ராமர் கோவிலை கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் இருந்து இந்து அமைப்புக்கள் சார்பில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான செங்கல்கள், ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Tags : Rama Temple ,Ayodhya , Ayodhya, Rama Temple, April, Supreme Court, Decision, Central Government, Counsel
× RELATED ராமனுக்கு உடனடியாக மகுடம் சூட்ட...