×

சேலத்தில் அமமுக அதிருப்தியாளர்கள் கூட்டம் அதிமுகவில் சசிகலா சேருவாரா?: புகழேந்தி பேட்டி

சேலம்: சேலத்தில் நடந்த அமமுக அதிருப்தியாளர் கூட்டத்துக்குப்பின், முதல்வரிடம் தேதி பெற்று அதிமுகவில் இணைய முடிவு எடுத்துள்ளதாகவும், சசிகலா சேருவது பற்றி அவர் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் முடிவு செய்வார்  என்றும் புகழேந்தி தெரிவித்தார். சேலம் மண்டல அமமுக அதிருப்தி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமமுக செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளாக பட்டா இல்லாத புறம்போக்கு நிலம் போல, தினகரன் கம்பெனியில் பணியாற்றினோம். தவறு செய்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அதிமுகவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.  

முதல்வரிடம் தேதி பெற்று, விரைவில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைவோம். டிடிவி தினகரன் கூடாரம் முழுவதும் காலியானது. பழனியப்பன் தான் அங்குள்ள சிலீப்பர் செல். உள்ளாட்சி தேர்தலில் நிற்க கூட அங்கு  ஆட்கள் இல்லை. நின்றாலும் 200 ஓட்டு தான் வாங்குவார்கள். கட்சியை பதிவு செய்ய அபிடவிட் தாக்கல் செய்த 20 பேர், தற்போது வெளியே வந்துவிட்டோம். எங்களது அபிடவிட்டை வாபஸ்பெற்று, கட்சியை அங்கீகரிக்க கூடாது என தேர்தல்  ஆணையத்திற்கு மனு அளித்துள்ளோம்.
 சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் தான், அதிமுகவில் இணைவாரா, மாட்டாரா என்ற அவரது நிலைப்பாடு தெரியும். ஊடகத்தின் முன்னிலையில் என்னுடன் நேருக்கு நேர் பேச டிடிவி தயாரா? அமமுகவின் ஐடி பிரிவு ஒரு  புளூபிலிம் கம்பெனி. விரைவில் அவர்கள் ஜெயிலுக்கு போவார்கள். இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

Tags : Salem Will Sasikala ,AIADMK ,Ammunition dissidents ,Salem ,Prachandi , Ammunition ,dissidents,Sasikala,AIADMK?
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...