×

49 சதவீதமாக அதிகரிப்பு உயர்கல்வி படிப்பவர்கள் தமிழகத்தில்தான் அதிகம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

தர்மபுரி: உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை 49 சதவிகிதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்ல திருமண வரவேற்பு விழா,  காரிமங்கலம் கெரகோடஅள்ளி கிராமத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி பேசியதாவது: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொடர்ந்து 4  முறை ஒரே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவரது சிறந்த  நிர்வாகத்தின் காரணமாக, உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 49 சதவிகிதமாக உயர்ந்து,  இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இது, உயர்கல்வியில் ஒரு சகாப்தம். வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

மேலும், தர்மபுரி  அதிமுகவின் கோட்டை என்பதை, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்  சட்டப்பேரவை இடைத்தேர்தலின்போது அமைச்சர் கே.பி.அன்பழகன்  நிரூபித்துள்ளார்.  அண்மையில்  நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை  டைத்தேர்தல்களிலும் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இது  ஒரு மக்கள் இயக்கம் என நிரூபித்துள்ளது. அதிமுகவின் வலிமையை மக்கள் மன்றத்தில் நிருபித்துள்ளோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ேபசினார்.

Tags : Edappadi Palanisamy ,Tamil Nadu ,Chief Minister , An increase, 49 per ,cent,higher education, Minister Edappadi Palanisamy
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...