×

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்த சம்பம் என்பவரின் மகன் எஸ்.கார்த்திக்(27) என்பவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில்  உள்ள மணமகன் வீட்டில் நேற்று காலை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இது குறித்து தகவலறிந்து சமூக நலத்துறை ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவே  மணமகன் கார்த்திக் வீட்டிற்கு சென்றனர். மணக்கோலத்தில் இருந்த  சிறுமியை மீட்டு திருவண்ணாமலை பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.Tags : The little, girl , married, Stopping
× RELATED சிறுமிக்கு எஸ்பி பரிசு