×

அண்ணாமலையார் கோயிலில் இன்று அன்னாபிஷேகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திர நாளன்று  அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அப்போது, சுவாமியை வழிபட்டால் கோடி சிவதரிசனம் செய்ததற்கு சமம்  என்பது ஐதீகம். அதன்படி, அஸ்வினி நட்சத்திர நாளான இன்று அண்ணாமலையார் கோயிலில்  மூலவர் அண்ணாமலையார் மற்றும் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், ஐப்பசி மாத பவுர்ணமி  இன்று மாலை 6.46 மணிக்கு தொடங்கி, நாளை (செவ்வாய்) இரவு 7.49 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.Tags : Annapoesham ,Annamayaliyar , Annapoesham , Annamayaliyar ,temple
× RELATED ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்