×

சில்லரை வியாபாரிகள் நடுத்தெருவுக்கு வரும் அவலநிலை: செல்வக்குமார், சில்லறை கடை வியாபாரிகள் சங்க தலைவர்

இன்றைய நாட்களில் உணவில்லாமல் கூட இருந்து விடலாம் போல, ஆனால் இன்டர்நெட் எனப்படும் இணையதளம் இல்லாமல் மக்கள் இருப்பது பெரும் சிரமம் தான். வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் உறவை முற்றிலுமாக  மாற்றியமைத்த பெருமை (!?) இந்த இணையத்துக்குத் தான் சேரும். நமக்குத் தேவையானவற்றை நேரடியாக கடைக்குச் சென்று வாங்குவதைத் தவிர்த்து, நாம் இருக்கும் இடத்துக்கே பலவகையான பொருள்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றன.  முன்பெல்லாம் ஆன்லைனில் எலக்ட்ரானிக் பொருள்களான டிவி, வாஷிங்மிஷின், கிரைண்டர், வாட்ச் மற்றும் செல்போன் போன்ற பொருள்களை தான் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்க தொடங்கியுள்ளனர். அதனால் சின்ன முதலீடுகள்  போட்டு சில்லரை  கடை நடத்தி வருவோர் நடுத்தெருவுக்கு வரும் அவலம் நெருங்கி கொண்டிருக்கிறது. தற்போது ஓட்டல் தொழிலிலும் ஆன்லைன் விற்பனை பிரபலமாகி உள்ளது. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடுவதை ஏதோ மக்கள் பெருமையாக கருதுகிறார்கள். ஆனால் அது தரமான உணவுதானா என்று பார்ப்பதில்லை.  அலையாமல் வீடு தேடி வருவதால் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். இதையடுத்து அடுத்த கட்டமாக காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் போன்றவற்றில் ஆன்லைன் வர்த்தகம் ஊடுருவ ஆரம்பித்து விட்டது. இதனால்  எங்களை போன்று பல வருடங்களாக சூப்பர் மார்க்கெட், மளிகை கடை நடத்தி வருபவர்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆன்லைன் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும் முறை முதலில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தான் தொடங்கியது. ஆனால் தற்போது பாமர மக்கள் கூட கால்க்குலேட்டர் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்து பொருட்களும்  கடைகளுக்கு சென்று வாங்காமல் அனைத்துமே ஆன்லைனில் வாங்க தொடங்கியுள்ளனர். இதையடுத்து தற்போது நம்ம ஊரிலும் மளிகைப் பொருள்களை வீட்டுக்கே டெலிவரி செய்யும் முறை தொடங்கியுள்ளது. அவர்கள், நகரங்களில் வசிக்கும் மக்களிடம் மார்க்கெட்டிங் செய்து அனைத்து காய்கறிகள், பழங்களை வீட்டுக்கு வந்து தருகிறோம்’ எனக் கூறி மார்க்கெட்டிங் செய்தாலே போதும் வாங்கி விடுகிறார்கள். இவர்கள் ஏதாவது ஒரு பெரிய சூப்பர்  மார்க்கெட் உடன் ஒப்பந்தம் வைத்துக் கொண்டு, ஆர்டர் வர வர அந்த சூப்பர் மார்க்கெட் மூலம் மளிகைப் பொருள்களை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். மேலும் கிராம பகுதிகளில் உள்ள மக்கள் வெகு தொலைவில் இருந்து வருபவர்கள் முன்கூட்டியே எங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னென்ன பொருட்கள், எவ்வளவு கிலோ என்று முன்கூட்டிய சொல்லி விடுவார்கள். அதன்படி  நாங்கள் அவர்கள் ஆர்டர் கொடுத்த பொருட்களை பேக்கிங் செய்து பேருந்து மூலமோ அல்லது அவர்களே நேரில் வந்து வாங்கி செல்லும் முறையை தான் தற்போது மார்க்கெட்டிங் செய்து அதை ஆன்லைன் வர்த்தகம் என்று மக்களை ஏமாற்றி  வருகின்றனர். மக்களும் இதை நம்பி ஆன்லைனில் பொருட்களை வாங்குகின்றனர். மேலும் ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் தரமானதாக இருக்குமா என்று தெரியவில்லை.

மேலும் எங்களுடைய கடைகளில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்குகிறோம். ஆன்லைன் முறை வந்து விட்டால் அவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும். 10 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 2, 5 பேர் தான் வேலைக்கு  வைப்பார்கள். இதனால் பாதி பேர் வேலை இழக்கும் நிலை உருவாகும். எனவே அரசு எலக்ட்ரானிக், உணவுபொருட்களில் ஆன்லைன் விற்பனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தற்போது மளிகை பொருட்களிலும் ஆன்லைன்  விற்பனையை ஊக்குப்படுத்துவது நல்லது அல்ல. எனவே அரசு இதை தடை செய்தால் நன்றாக இருக்கும்.தற்போது பாமர மக்கள் கூட கால்க்குலேட்டர் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்து பொருட்களும் கடைகளுக்கு சென்று வாங்காமல்  அனைத்துமே ஆன்லைனில் வாங்க தொடங்கியுள்ளனர்.

Tags : Retailers ,President ,Selvakumar ,Retail Retailers Association ,Retail Store Merchants Association , Retailers, Selvakumar, president ,Retail Store
× RELATED சேரன்மகாதேவியில் குண்டாசில் வாலிபர் கைது